தமிழ் சினிமாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான பிரசாத் லேப்ஸில் தொழில்நுட்பத் துறை தலைவராக பணியாற்றிய எஸ். சிவராமன் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். “ப்ராசஸிங், கலர் கரெக்ஷன், சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பணிகளில் சிவராமனின் பங்களிப்பு முக்கியமானது. சினிமா பிலிம் தொழில்நுட்பத்தில் இருந்து டிஜிட்டல் முறைக்கு மாறிய காலகட்டத்தில், பலருக்கு அவர் சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டியாக இருந்தார். தென்னிந்திய திரையுலகம் கற்பாறை போன்ற உறுதியான ஒரு தூணை இழந்துவிட்டது. அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Add a Comment
