கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜின் சாதனைகளைப் பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் சிறப்பாக ஓடி இந்திய அணியின் தங்கப் பதக்கக் கனவுக்கு முக்கிய பங்களிப்பு செய்தார் வித்யா. தொடர்ந்து கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றார். இதன் மூலம் பி.டி. உஷாவின் 42 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வித்யாவை நேரில் அழைத்த ரஜினிகாந்த், அவரது சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
