Advertisement

‘டோரதி’ படத்தின் உண்மையான வெற்றி இதுதான் – மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து, படத்தின் வெற்றி விழா நேற்று (அக்.7) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘டோரதி’ உருவானதன் நோக்கம் மற்றும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார்.

சினிமா வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது என்ற நம்பிக்கை தனக்கு எப்போதும் இருப்பதாக கூறிய அவர், திருநங்கைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ‘டோரதி’ கதையை உருவாக்கியதாக தெரிவித்தார். பாலின வேறுபாடுகளை கடந்து அனைவரையும் மனிதர்களாக பார்க்க வேண்டும் என்பதே படத்தின் முக்கிய கருத்து என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், படத்தை பார்த்த பலரும் தங்களுக்குள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியது தான் ‘டோரதி’ படத்தின் மிகப்பெரிய வெற்றி என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும், திரையரங்குகளில் ரசிகர்கள் அளித்த ஆதரவு தனக்கு நம்பிக்கையை கொடுத்ததாகவும், படம் பார்த்த ஆண்களும் பெண்களும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் அவர் கூறினார். இனி திருநங்கைகளை பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்படும் என்றால் அதுவே இந்தப் படத்தின் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply