ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’யின் 7-வது சீசன் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. இந்த முறை வழக்கமான முறையில் இல்லாமல், நட்சத்திர ஜோடிகள் போட்டியாளர்களாக பங்கேற்றனர். மொத்தம் 9 ஜோடிகள் களமிறங்கிய நிலையில், தற்போது 3 ஜோடிகள் மட்டுமே போட்டியில் தொடர்ந்து வருகின்றனர். முந்தைய சீசன்களில் பங்கேற்ற சீனியர் போட்டியாளர்களுடன் அவர்கள் போட்டியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘குக் வித் கோமாளி 7’ நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் அரையிறுதி சுற்று நடைபெறவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி சீசன் 7-ன் பிரம்மாண்ட இறுதிப்போட்டி நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Add a Comment
