10 கோடி மணிநேர பார்வைகளை கடந்த ‘ரிசார்ட்’!

பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரிசார்ட்’ இணையத் தொடர், கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் தலா 4 எபிசோடுகள் வெளியாகி வருகிறது. முறையாக சமையல்கலை பயிலாத நாயகன், சிறந்த செஃப் ஆக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்களை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாகியுள்ளது. ‘எருமை சாணி’ புகழ் விஜய் குமார் கதையை எழுதி நாயகனாக நடித்துள்ள நிலையில், தலைவாசல் விஜய் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளைஞர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர், ஹாட்ஸ்டாரின் நேரடி தயாரிப்பில் உருவாகி 10 கோடி மணிநேர பார்வைகளை கடந்த முதல் இணையத் தொடர் என்ற சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading