‘இந்தியன் 3’ வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்!

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’ திரைப்படம் தொடர்பாக நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பங்களுக்கு தற்போது தெளிவு கிடைத்துள்ளது. இப்படத்தின் பணிகள் மீண்டும் தீவிரமாக தொடங்கியுள்ளதாக லைகா புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘இந்தியன் 2’ எதிர்பார்த்த வரவேற்பை பெறாததைத் தொடர்ந்து மூன்றாம் பாகம் கைவிடப்பட்டதாகவும், நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் என்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், அந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இந்தியன் 3’ பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை படக்குழு உறுதி செய்துள்ளது. படப்பிடிப்பில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பேட்ச்வொர்க் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே சேனாபதி கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தும் புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. “சேனாபதி இஸ் பேக் வித் ஜீரோ டாலரன்ஸ்” என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான இந்த போஸ்டர், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.

சித்தார்த், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தில் சேனாபதியின் தந்தையான வீரசேகரன் பலராம் கதாபாத்திரத்தின் பின்னணி மற்றும் ஊழலுக்கு எதிரான அவரது போராட்டம் விரிவாக இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப பணிகள் மற்றும் VFX வேலைகள் முழுமையாக நிறைவடைந்ததும் ‘இந்தியன் 3’ திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading