அட்டக்கத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘பந்தா கேங்ஸ்’. குறும்பட இயக்குநர் மதி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆனந்தி கதாநாயகியாக நடிக்க, சுபா வரதராஜன், ஹரி முனியப்பன், ‘தங்கலான்’ அர்ஜூன், கே.பி.ஒய். திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் மதி கூறுகையில், போலீஸ் குவார்ட்டர்ஸ் மற்றும் நடுத்தர மக்களுக்கான ஹவுஸிங் போர்டு குடியிருப்புகள் எதிரெதிரே அமைந்திருக்கும் சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே உருவாகும் பிரச்னைகளே கதையின் மையமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். ஹவுஸிங் போர்டில் வசிக்கும் தினேஷுக்கும், போலீஸ் குவார்ட்டர்ஸில் வசிக்கும் லிங்கேஷுக்கும் இடையிலான பிரச்னைகள் எந்தளவுக்கு செல்கின்றன என்பதே திரைக்கதையாக உருவாகியுள்ளது.
குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த படமாக ‘பந்தா கேங்ஸ்’ உருவாகி வருவதாகவும் மதி தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு சத்திய பிரகாஷ் இசையமைக்க, சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
