நடிகை அதிதி ஷங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சக நடிகை (அனுபமா பரமேஸ்வரன்) அளித்த பேட்டியை கேட்டேன். அவர் கூறிய கருத்தில் பலருக்கும் மாறுபட்ட எண்ணங்கள் இருக்கலாம். ஆனால், அவர் பேசிய விதத்திற்கும் அந்த விஷயத்தை வெளிப்படுத்தியதற்கும் நான் தலை வணங்குகிறேன். அவர் கூறியதை மிகவும் முக்கியமான விழிப்புணர்வாகவே பார்க்கிறேன். ஏராளமான பெண்களும் ஆண்களும் இதே போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், தங்களுக்கு நடப்பது இதே பிரச்னைதான் என்பதை பலரால் உணர முடிவதில்லை” என்று அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Add a Comment
