நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை இயக்குநர் மதிமாறன் இயக்கியுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்க்கை முறையையும், படகுப் போட்டிகளையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்நிலையில், ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Add a Comment
