Advertisement

மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு நானா படேகர் பேசிய வீடியோ வைரல்!

நானா படேகரின் மறைவு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்வில் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்து அவர் பேசிய வார்த்தைகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அந்த வீடியோவில் நானா படேகர், வாழ்க்கையின் முடிவு என்பது அனைவருக்கும் ஒருநாள் வந்தே தீரும் என்றும், அடுத்த நாள் தான் உயிருடன் இருப்போமா என்பது கூட யாருக்கும் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாம் விடைபெறுவதற்கு முன்பு, செய்ய நினைத்த விஷயங்களை நம்மால் செய்து முடிக்க முடிந்ததா என்பதை நமக்குள் கேட்க வேண்டும்” என்ற கருத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

1951-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த நானா படேகர், 1978-ம் ஆண்டு வெளியான ‘கமன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தி மற்றும் மராத்தி மொழிப் படங்களில் அழுத்தமான நடிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய இவர், தமிழில் ‘பொம்மலாட்டம்’ மற்றும் ‘காலா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தில் ஹரிதாதா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பரவலான கவனத்தைப் பெற்றார். இந்நிலையில், அவரது மறைவுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய இந்த வீடியோ, தற்போது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Add a Comment

Leave a Reply