தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரது நடன திறமைக்காகவே ஏராளமானோர் அவரை தொடர்ந்து ரசித்து வருகின்றனர். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்திருக்கும் அவர், தற்போது தனுஷுக்கு ஜோடியாக ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா பகுதிகளில் நடைபெறும் புதிய கடைகளின் திறப்பு விழாக்களில் ஸ்ரீலீலா அடிக்கடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அந்த நிகழ்வுகளின்போது தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதோடு, அவர்களது அன்பையும் ஆதரவையும் அருகிலிருந்து அனுபவித்து வருகிறார்.
இதுகுறித்து ஸ்ரீலீலா கூறுகையில், “ரசிகர்களை நேரடியாக சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர்கள் வெளிப்படுத்தும் பாசமும், உற்சாகமான வரவேற்பும் என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நான் பணம் சம்பாதித்தபோதோ, புகழை பெற்றபோதோ கூட கிடைக்காத அளவுக்கு இந்த மகிழ்ச்சி ரசிகர்களின் அன்பால் கிடைக்கிறது. என்னுடைய வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் ரசிகர்களின் ஆதரவு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இப்படியான அன்பை பெறுவதற்கு நிச்சயமாக கொடுத்து வைத்திருக்க வேண்டும். ரசிகர்களிடம் இருந்து இத்தகைய அன்பை பெறும் நடிகையாக இருப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்” என்று கூறினார்.
—
