Advertisement

“சில நேரம் அதிகாலை 3 மணி வரை வேலை செய்வேன்!” – அரவிந்த் சாமி பகிர்ந்த வாழ்க்கை முறை!

நடிகரும் தொழிலதிபருமான அரவிந்த் சாமி, தனது தினசரி வாழ்க்கை மற்றும் வேலை செய்யும் விதம் குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக நேரமில்லை என கூறுபவர்களுக்கு அவரது கருத்துகள் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

வேலைகளை பட்டியலிட்டு திட்டமிடுவது தனக்கு சலிப்பை ஏற்படுத்துவதாக கூறிய அவர், தனக்கென மேனேஜர், உதவியாளர் அல்லது செயலாளர் என யாரும் இல்லை என்றும், தனது வேலைகளை பெரும்பாலும் தானே செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றையும் தானே வாங்குவதாக கூறியுள்ளார்.

சில நாட்களில் அதிகாலை 3 மணி வரை வேலை செய்வதாகவும், மற்ற நாட்களில் இரவு தூங்கி அதிகாலை 3.30 அல்லது 4 மணிக்கே எழுந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் 8 முதல் 9 மணி நேரம் வரை தூங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஒரு விஷயத்தில் முழுமையாக மூழ்கிவிடும்போது வீட்டில் நடக்கும் சில விஷயங்களையே மறந்துவிடுவதாகவும் அரவிந்த் சாமி சுவாரஸ்யமாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற மறதி சில நேரங்களில் தனக்கு ஏற்படுவதாக கூறிய அவர், ஒருவேளை வயது காரணமாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply