நடிகர் துருவ் ‘பைசன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் இசைப் பணிகளை பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மேற்கொள்ள உள்ளார்.இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் துருவுக்கும் இடையிலான காதல் உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அனுபமா, காதல் என்ற பெயரில் தான் துன்புறுத்தலுக்கு ஆளானதாக தெரிவித்திருந்தார். அவருடைய இந்த கருத்துகள் இணையத்தில் வைரலானது.
இந்த சூழ்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் துருவ், “திரைத்துறையை நான் தேர்வு செய்தபோதே இந்தப் பயணத்தில் விமர்சனங்களும், தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும் இருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டேன். இருந்தாலும், அவை என்னை பாதிக்கவே இல்லை என்று என்னால் கூற முடியாது. நம் வாழ்க்கையில் நாம் நேசிக்கும் ஒவ்வொருவரையும் மிகவும் உறுதியுடன் பாதுகாப்பது மிகவும் முக்கியமான விஷயம்.
நாம் நம்மிடம் உண்மையாக இருக்கும்போது, நம்மை எது உறுதியாக நிலைநிறுத்துகிறது என்பதை தெளிவாக அறிந்திருந்தால், வரும் விமர்சனங்களும் கண்காணிப்பும் காலப்போக்கில் கடந்து சென்றுவிடும். என்னுடைய இந்தப் பயணம் முழுவதும் எனக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து ஊக்கமளித்த சில நெருக்கமான ஆதரவாளர்களும் இருந்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
