“11 குழந்தைகள் வேண்டும் என நினைத்தேன்” – அனுபமா பரமேஸ்வரன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக குடும்பம், குழந்தைகள் மற்றும் தனது கடந்தகால உறவு குறித்து அவர் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

குழந்தைகள் மீது தனக்கு எப்போதுமே அதிக விருப்பம் இருந்ததாக தெரிவித்த அனுபமா, ஒரு காலத்தில் 11 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாக கூறியுள்ளார். ஆனால், கடந்தகால உறவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களும், ஏற்பட்ட தவறான புரிதல்களும் அந்த எண்ணத்தை மாற்றியதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மாதவிடாய் போன்ற பெண்களின் இயல்பான உடலியல் மாற்றங்கள் குறித்து சமூகத்தில் நிலவும் தவறான பார்வையையும் அனுபமா சுட்டிக்காட்டியுள்ளார். பெண்கள் அந்த நாட்களில் அனுபவிக்கும் உடல் வலி மற்றும் மன அழுத்தத்தைப் புரிந்துகொள்ளாமல் சிலர் மட்டமாகவும் தவறாகவும் பேசுவது தன்னை மிகவும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading