“விமர்சனங்களை ஏற்க பழகிவிட்டேன்!” – கயாடு லோகர்

‘டிராகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு லோகர், தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்திலும் நடித்திருந்தார். நானியுடன் அவர் நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்து கயாடு லோகர் பேசியுள்ளார்.

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள சிரமமாக இருந்ததாகவும், காலப்போக்கில் அவற்றை புரிந்துகொள்ள பழகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றி, தோல்வி இரண்டும் சினிமாவில் இயல்பானது என்றும், தொடர்ந்து கடினமாக உழைக்காமல் இருப்பதுதான் தவறு என்றும் கூறியுள்ளார்.

தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோகர் நடித்து வருகிறார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading