“கவர்ச்சி பாடல்களுக்கு மட்டுமே என்னை அணுகுகிறார்கள்!” – தமன்னா வருத்தம்!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் தமன்னா. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலய்யா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து சில திரைப்படங்களிலும் சிறப்பு பாடல்களுக்கு நடனமாடியுள்ள அவர், தற்போது தனக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது எதிர்பார்ப்பு குறித்து பேசிய தமன்னா, “எனக்கு சவால் அளிக்கக்கூடிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஐட்டம் பாடல்களுக்காகவே என்னை அணுகுகிறார்கள். கவர்ச்சியான பிம்பத்துக்குள் மட்டுமே என்னை பார்க்காமல், ஒரு நடிகையாக எனது முழு திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களை இயக்குநர்கள் வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் சினிமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், “காலத்துக்கு ஏற்ப திரைப்படங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. கதையின் தேவைக்காக முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருந்தால், அதனை மட்டும் தனியாகப் பார்த்து தவறாக மதிப்பிடக் கூடாது” என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading