கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டோரதி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மதுரையை கதைக்களமாகக் கொண்டுள்ளது.
நட்பு, காதல், சாதிய வேறுபாடு, வன்முறை மற்றும் ஆணாதிக்கம் போன்ற சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியான நாள் முதல்‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘டோரதி’ படத்தை பார்த்த நடிகர் மம்மூட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் கதை மற்றும் படக்குழுவினரின் பணியை பாராட்டி மம்மூட்டி தெரிவித்த வார்த்தைகள், ‘டோரதி’ குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
