கவின் – நயன்தாரா நடித்துள்ள ‘Hi’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படமான ‘ஹாய்’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், கவின் மற்றும் நயன்தாரா இணைந்து வெளியீட்டு தேதியை அறிவிக்கும் சிறப்பு வீடியோவை வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

முதலில் இந்தப் படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, விஷாலின் ‘மகுடம்’ உள்ளிட்ட பெரிய படங்கள் வெளியாக இருந்ததால், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள ‘ஹாய்’, காதல் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading