பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் கியாரா அத்வானி, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து பிசியாகப் படங்களில் நடித்து வருகிறார். ‘எம்.எஸ். தோனி’, ‘கபீர் சிங்’, ‘குட் நியூஸ்’, ‘ஷேர்ஷா’, ‘பூல் புலையா 2’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் அவர் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் கியாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேசமயம், சமூக வலைதளங்களில் கவர்ச்சியான மற்றும் ஸ்டைலிஷ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில், கியாராவை தமிழில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நேரில் சந்தித்து கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகை தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. கியாரா ஏற்கனவே தெலுங்கு திரைப்படங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவர் தமிழிலும் அறிமுகமானால் அது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
