புகழுக்காக எல்லை மீற மாட்டேன்”.. சர்ச்சைக்கு விளக்கம் அளித்த தர்ஷா குப்தா!

சமீபத்தில் ஒரு செயலியை விளம்பரப்படுத்தியதையடுத்து நடிகை தர்ஷா குப்தா சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அந்த செயலி குறித்த எதிர்ப்புடன் சேர்த்து, அவரையும் ரசிகர்கள் விமர்சித்தனர்.

விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தர்ஷா குப்தா, பின்னர் வெள்ளித்திரைக்கு வந்து “ஓ மை கோஸ்ட்” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அவர், அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த சர்ச்சைக்கு பிறகு அவர் வெளியிட்ட விளக்கப் பதிவில், “என்னை நீண்ட காலமாக நேசித்து வந்தவர்களிடம் நான் யார் என்பதை விளக்க வேண்டிய நிலை வந்திருப்பது வருத்தமாக இருக்கிறது. அந்த செயலியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. அது ரசிகர்களுடன் சாதாரணமாக உரையாடும் ஒரு தளம் என்று மட்டுமே நான் நினைத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் புகைப்படங்களை பகிரலாம்; ஆனால் எனக்கென்று சில எல்லைகள் இருக்கின்றன. பணத்திற்காகவோ புகழிற்காகவோ அந்த எல்லைகளை ஒருபோதும் கடக்க மாட்டேன். நான் செய்யாத விஷயங்களுக்காக என்னை மதிப்பிட வேண்டாம். இதுவரை நீங்கள் அறிந்த அதே தர்ஷாவாகவே என்னை நினைவில் வைத்திருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading