Advertisement

குரங்குடன் விளையாடி மகிழ்ந்த விக்ரம்.. வைரலான வீடியோ!

நடிகர் விக்ரம் தற்போது இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். “சியான் 63” என்று அழைக்கப்படும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படம் முழு நீள ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.

படத்திற்காக விக்ரம் தனது உடல் அமைப்பை முழுமையாக மாற்றியிருப்பது ரசிகர்களிடையே ஏற்கனவே பேசுபொருளாகியுள்ளது. சமீபத்தில் அவர் பகிர்ந்திருந்த புதிய கெட்-அப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், குரங்குடன் குறும்பு செய்து விளையாடும் வீடியோ ஒன்றை விக்ரம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், குரங்குடன் பேசிக்கொண்டு அதேபோன்ற முகபாவனைகளையும் அசைவுகளையும் செய்து விளையாடும் விக்ரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னதாக, தனது வீட்டில் வளர்க்கும் கிளியுடன் பேசும் வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த புதிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply