சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான ‘மகாலட்சுமி’ சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 2017-ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடரில் காவ்யா சாஸ்திரி, ஹேமந்த், சிந்து சாதனா, லக்ஷ்மி பிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மகாலட்சுமி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான காவ்யா சாஸ்திரி, அதன் பின்னர் தமிழ் சீரியல் உலகில் அதிகமாக காணப்படவில்லை. தற்போது அவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீரியலை Aura Creations நிறுவனம் தயாரிக்கிறது என கூறப்படுகிறது.
Add a Comment
