Advertisement

வைரலாகும் சான்வே மேக்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரசிகர்களைப் பெற்று வரும் சான்வே மேக்னா, தற்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அழகிய உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மணிகண்டன் நடிப்பில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் நடிகை சான்வே மேக்னா. முதல் படத்திலேயே தனது யதார்த்தமான நடிப்பாலும், அழகான முகபாவனைகளாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்குப் பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சான்வே மேக்னா. திரையில் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், சான்வே மேக்னா தற்போது நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அழகிய உடையில், கொள்ளை அழகுடன் அவர் போஸ் கொடுத்துள்ள இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் லைக்குகளையும் கமெண்ட்களையும் குவித்து வருகின்றன.

Add a Comment

Leave a Reply