சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘புது வசந்தம்’ தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷியாம் மற்றும் சோனியா சுரேஷ் நடித்துள்ள இந்த தொடர், பகல் நேர தொடர்களில் அதிக ரசிகர்களை பெற்ற ஒன்றாக உள்ளது. 2023 ஜூலை மாதம் முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர், ஆகஸ்ட் 10 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பாகும் என்று சன் டிவி அறிவித்துள்ளது.
Add a Comment
