Advertisement

சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு… தனது முதல் பாடல் குறித்து ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி!

‘வெயில்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ், வரும் டிசம்பர் 8ம் தேதியுடன் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இதுவரை பல மொழிகளில் 124 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ‘யூத்’, ‘இருமுடி’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘மண்டாடி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறியுள்ளார். துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஆகாயத்தில் ஒரு தாரகை’ படத்தின் கதையும் தனக்குப் பிடித்திருந்ததால், தமிழகத்தில் அப்படத்தை விநியோகம் செய்ய விரும்பியதாகவும், அது நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், உடற்பயிற்சி செய்யும்போது இசையைக் கேட்பதைவிட அமைதியை விரும்புவதாகவும், காரில் பயணிக்கும்போது எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைக் கேட்பதாகவும் கூறியுள்ளார். தான் இசையமைத்த முதல் பாடலான ‘வெயிலோடு விளையாடி’ இன்றும் மறக்க முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், சினிமாவுக்கு வரவில்லை என்றால் கிரிக்கெட் வீரராகவோ அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியராகவோ ஆகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது ‘அன்புடன் மகி’ படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply