Advertisement

பெண் போராளியின் கதையில் இனியா நடிக்கும் ‘வன்னி’!

இனியா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வன்னி’ திரைப்படம், பெண் போராளியின் போராட்டத்தையும் பெண்களின் உரிமைகளையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் மற்றும் சுக்கிரன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் எஸ்.ஏ. கார்த்திகேயன் இப்படத்தைத் தயாரித்து இயக்குகிறார். இதில் கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, சாய் ரத்னா, பிரியங்கா தினேஷ், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வாகீசன் ராசைய்யா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கை, நாகப்பட்டினம், பூம்புகார், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகத தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் குறித்து அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply