Advertisement

துரந்தர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரன்வீர் சிங்குடன் இணையும் ஆதித்யா தார்?

ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தார் இயக்கிய ‘துரந்தர் 2’ திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. முதல் பாகம் இந்தியில் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இதன் தொடர்ச்சியாக வெளியான இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.2,000 கோடி வசூலைக் கடந்தது.

இந்நிலையில், ஆதித்யா தார் மீண்டும் ரன்வீர் சிங்கை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் 2028-ம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply