பிக்பாஸ்-க்கு நோ சொன்ன மல்லிகா ஷெராவத்!

ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 20 நிகழ்ச்சி சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த புதிய சீசன் செப்டம்பர் 6 முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் போட்டியாளராக பங்கேற்கிறார் என்ற செய்திகள் பரவி வந்தன. ஆனால் தற்போது அந்த தகவலை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிக்பாஸ் என்பது ஒரு நடிகையாக எனது எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமான மேடை அல்ல என்பதால் அதை நான் எப்போதும் தவிர்த்து வந்துள்ளேன். இருந்தாலும் ஒவ்வொரு புதிய சீசனும் தொடங்கும் போதும் இதுபோன்ற வதந்திகள் மீண்டும் மீண்டும் பரவுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading