பாடகர் மற்றும் இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம், பாடகி சுபிக் ஷா ரங்கராஜன் (சுஷா) ஆகியோர் இணைந்து உருவாக்கிய ‘வருவாய் வருவாய் கண்ணா’ பாடல், 69-வது கிராமி விருதுக்குச் சிறந்த உலக இசைப் படைப்புப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாரதியார் மற்றும் கிருஷ்ணரை மையமாகக் கொண்டு கர்நாடக இசையையும் நவீன இசையையும் இணைத்து இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ்ப் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் குறிப்பிடப்படுகிறது.
Add a Comment
