புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், எஸ்.ஜே. சூர்யா நடித்த 2022-ம் ஆண்டு வெளியான ‘வதந்தி’ இணையத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘வதந்தி 2’ உருவாக்கப்பட்டது. இதில் நடிகர் சசிகுமார் மூஸா ராஜா என்ற காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அபர்னா தாஸ், விவேக் பிரசன்னா, அனகா, யஷ்வந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள ‘வதந்தி – தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடர் இன்று அமேசான் பிரைம் OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.
Add a Comment
