மலையாள மாடல் சோனா ஒலிக்கல் தமிழ் சினிமாவில் என்ட்ரி!

கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியான சோனா ஒலிக்கல், விளம்பரப் படங்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். அதன் பிறகு ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான அவர், ஷேன் நிகாமுடன் இணைந்து நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ‘ஓ மேரி லைலா’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்த அவர், இப்போது தமிழிலும் புதிய படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் மற்றொரு முக்கிய நாயகியாக சோனா ஒலிக்கல் நடித்துள்ளார். படக்குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading