ஆண்டுதோறும் உடல் பரிசோதனை அவசியம் – ஆர்.ஜே.பாலாஜி அறிவுரை!

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளராக பல துறைகளில் இயங்கி வரும் ஆர்ஜே பாலாஜி, உடல்நலம் குறித்த முக்கிய விழிப்புணர்வு கருத்தை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், சென்னை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.இதுகுறித்து பேசிய அவர், 30-35 வயதிலிருந்து தானும் வருடந்தோறும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்து வருவதாக தெரிவித்தார். உடல்நல பிரச்சினைகளை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு இது உதவும் என்றும் கூறினார்.

மேலும், அரசு மருத்துவத் திட்டங்கள் மற்றும் குறைந்த கட்டண சுகாதார பேக்கேஜ்கள் மூலமாகவும் பொதுமக்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading