கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞராகவும், அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக மிஷ்கினும் நடித்துள்ளனர்.
அதேபோல் இப்படத்தில் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு பின்னர் நிறைவடைந்தது. தொடர்ந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஜூலை 24ஆம் தேதி படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்த ரிலீஸ் தள்ளிப்போனது.தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது, ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
—
