நள்ளிரவில் மணப்பெண் கோலத்தில் கவுரி கிஷன் – வெளியானது ‘தாரகை’ ப்ரோமோ!

கவுரி கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தாரகை’ திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. க்ரிஷ் எழுதி இயக்கும் இப்படத்தில் காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்க, சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெண்களின் பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் போன்ற அம்சங்களை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள ப்ரோமோ, பெண்கள் இரவு நேரத்திலும் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடுவதுதான் உண்மையான சுதந்திரம் என்ற கருத்துடன் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் கவுரி கிஷன், சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறுகிறார். சென்னை இன்னும் 96 கி.மீ. தொலைவில் இருப்பதை காட்டும் மைல்கல்லும் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. படத்தில் ‘இசை’ என்ற கதாபாத்திரத்தில் கவுரி கிஷன் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரோமோவும் படத்தின் கதைக்களம் குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading