இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.திரைப்படப் பணிகளுக்கிடையே தனுஷ் செய்துள்ள ஒரு மனிதநேய செயல் தற்போது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தான் படித்த தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்காக, தனது சொந்த செலவில் மூன்று தளங்களைக் கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை அவர் கட்டிக் கொடுத்துள்ளார்.
பள்ளியில் இருந்த பழைய கட்டிடத்தை அகற்றி அதன் இடத்தில் இந்த நவீன கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அந்த கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
