மோகன்லாலின் மகள் விஸ்மயா சினிமா அறிமுகம் – ‘துடக்கம்’ டிரெய்லர் வெளியீடு

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஏற்கனவே நடிகராக கவனம் பெற்று வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அவரது ஹாரர் திரைப்படமான ‘டைஸ் ஐரே’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.இப்போது மோகன்லால் தனது மகள் விஸ்மயாவையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் தயாரிப்பில் ஆண்டனி பெரும்பாவூர் உருவாக்கியுள்ள இந்த படத்தை ‘2018’ திரைப்படத்தின் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார்.

‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் விஸ்மயாவுடன் ஆஷிஷ் ஜோ ஆண்டனி, சாய்குமார், சித்திக், மனோஜ் கே. ஜெயன், ஜாபர் இடுக்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மோகன்லால் தாமஸ் ஸ்காரியா என்ற ஐபிஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.

மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றுள்ள விஸ்மயா, படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரு, குட்டிக்கானம், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading