‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உலக வசூலில் புதிய சாதனை!

கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடித்துள்ள இந்த படம் வசூல் வேகத்தில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

சுமார் ரூ.2,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், வெளியான முதல் ஆறு நாட்களிலேயே 1.05 பில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.10,000 கோடியாகும். இதன் மூலம் உலக சினிமா வரலாற்றில் மிக வேகமாக 1 பில்லியன் டாலர் வசூலை எட்டிய இரண்டாவது படமாக இந்த திரைப்படம் இடம்பிடித்துள்ளது. முதல் இடத்தில் 5 நாட்களில் இந்த மைல்கல்லை கடந்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ உள்ளது.

இந்தியாவிலும் ஸ்பைடர்மேன் படங்களுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த படம் கடந்த 6 நாட்களில் மட்டும் ரூ.362 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த ஆண்டின் முக்கியமான பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading