Advertisement

மறைந்த இயக்குநர் செழியனின் ‘காகிதமலர்’ – டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு!

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் சமீபத்தில் மறைந்தது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கடைசியாக ஒளிப்பதிவு செய்து இயக்கிய இந்த சுயாதீன திரைப்படமான ‘காகிதமலர்’, 39வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ‘Asian Future’ போட்டிப் பிரிவில் தேர்வாகியுள்ளது. மேலும், திரைப்படத்தின் உலகளாவிய முதல் திரையிடல் இரண்டு காட்சிகளாக நடைபெற உள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரும் செழியனின் மனைவியுமான பிரேமா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தேர்வு இந்திய மற்றும் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் செய்தி என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் இதை பெருமையுடனும் நன்றியுடனும் பகிர்ந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படத்தின் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் தபஸ் நாயக், செழியனின் உதவியாளர்களான மணி, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், ஆர்.பி. ராஜா, பேச்சியப்பன் உள்ளிட்டோருக்கும், அறிமுக நடிகர் பராந்தகச் சோழன் மற்றும் அறிமுக நடிகை ஜனனி செண்பகா ஆகியோருக்கும் பிரேமா நன்றி தெரிவித்துள்ளார்.

—

Add a Comment

Leave a Reply