‘வதந்தி 2’ அப்டேட்… முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்த சசிகுமார்!

2022-ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற வெப் தொடரான ‘வதந்தி’, தற்போது தனது இரண்டாவது சீசனுடன் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய முதல் சீசனில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கிரைம் திரில்லர் பாணியில் ‘வதந்தி 2’ உருவாகியுள்ளது. வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த தொடரை எஸ். குஹபிரியா, எஸ். நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸே இந்த முறையும் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்த சீசனில் நடிகர் சசிகுமார், ‘மூசா ராசா’ என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்திருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading