ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி பாராட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

இந்திய இலக்கியத்தின் மிக உயரிய அங்கீகாரமாக கருதப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் மற்றும் பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில், மத்திய முன்னாள் அமைச்சரும் இந்தியத் தத்துவஞானியுமான டாக்டர் கரண் சிங் இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.

தமிழகத்தில் இருந்து இதற்கு முன்பு எழுத்தாளர்கள் அகிலன் மற்றும் ஜெயகாந்தன் மட்டுமே ஞானபீட விருதைப் பெற்றிருந்த நிலையில், தற்போது மூன்றாவது தமிழராக வைரமுத்து இந்த பெருமையை பெற்றுள்ளார். மேலும், தமிழ் கவிதைக்காக இந்த விருது வழங்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பதும் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த சாதனையை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். பல ஆண்டுகளாக இலக்கியத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமே இந்த விருது என்றும், அவரது படைப்புகள் இனி வரும் தலைமுறைகளுக்கும் மொழி, இலக்கியம் மீதான ஈர்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் பாராட்டியுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ, பத்மபூஷண், சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், ஏழு தேசிய விருதுகளையும் வைரமுத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading