‘பெத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ராம்சரண் தற்போது கை காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக, அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சிகிச்சையை முடிக்க முடிவு செய்த ராம்சரண், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில் அவரது தந்தை சிரஞ்சீவி, மனைவி உபாசனா மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் உடன் இருப்பதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகு சில நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதுடன், அதன்பின் சுமார் மூன்று மாதங்கள் ஓய்வெடுத்த பிறகே மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
