முதல்வர் விஜய் உடனான நினைவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்… அனிருத் நெகிழ்ச்சி!

நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணை, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கூட்டணிகளில் ஒன்றாக திகழ்கிறது. பல வெற்றி திரைப்படங்கள் மற்றும் மறக்க முடியாத பாடல்கள், பின்னணி இசைகள் மூலம் இந்த கூட்டணி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது.

விஜய்யின் திரையுலகின் கடைசி படமாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் இந்த வெற்றிகரமான கூட்டணியும் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த பதிவில், “‘ஜனநாயகன்’, ‘லியோ’, ‘பீஸ்ட்’, ‘மாஸ்டர்’, ‘கத்தி’ என உங்களுடன் இணைந்து பயணித்தது மறக்க முடியாத, உணர்வுபூர்வமான அனுபவமாக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ள அவர், “என்மீது அளவற்ற நம்பிக்கை வைத்த விஜய் சாருக்கு மனமார்ந்த நன்றி. இந்த இசைப் பயணம் என்றும் நினைவில் நிலைத்திருக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading