துல்கர் சல்மானின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ‘பொம்மா பொம்மா’ பாடல் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து தெடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெற்றிப் படங்களை வழங்கி வரும் அவர், சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்தார்.

தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஐயம் கேம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேசமயம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கும் நேரடி தெலுங்கு படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையில், இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் துல்கர் சல்மானின் 41-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் முதல் பாடலான ‘பொம்மா பொம்மா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இந்தப் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading