வெளியீட்டுக்கு தயாராகிறதா சீனு ராமசாமியின் ‘இடி முழக்கம்’?

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘இடி முழக்கம்’ ஆகிய இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ‘இடி முழக்கம்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாகவும், காயத்ரி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சவுந்தரராஜா, யோகிபாபு, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென் மாவட்டங்களை பின்னணியாகக் கொண்ட கிராமத்து ஆக்‌ஷன் கதையாக படம் உருவாகியுள்ளது.

படத்தின் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்த ‘கானா விளக்கு மயிலே’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. அந்தப் பாடல்களை இயக்குநர் சீனு ராமசாமி மீண்டும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading