வில்லனாக அவதாரம் எடுக்கும் இயக்குனர் மோகன் ராஜா..? வெளியான புது தகவல்!

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா, தற்போது புதிய பாதையை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தொகுப்பாளர் மோகனின் மகனும், நடிகர் ரவி மோகனின் அண்ணனுமான அவர், ‘ஜெயம்’, ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கியவர்.

தற்போது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்கும் புதிய படத்தில், விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் மோகன் ராஜா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வில்லன் கதாபாத்திரம் ஆழமான மற்றும் ஸ்டைலிஷ் எதிர்மறை வேடமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading