ரீ-டேக் இல்லாத நிஜ உலகத்தை ரசிகர்கள் காணப்போகிறார்கள்… அஜித்தின் ஆவணப்படம் குறித்து இயக்குநர் ஏஎல்.விஜய் டாக்!

நடிகர் அஜித்குமார், சினிமாவைத் தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். கார் பந்தயத்தில் தனது பயணத்தை பதிவு செய்யும் வகையில் ‘Gladiators – In Pursuit of Challenges’ என்ற ஆவணப்படமும் தற்போது உருவாகி வருகிறது. இயக்குநர் விஜய் இயக்கும் இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் விஜய், இந்த ஆவணப்படம் அஜித்தின் நீண்ட நாள் கனவு என்றும், இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸை உலக அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வையின் வெளிப்பாடாக இது உருவாகி வருவதாகவும் தெரிவித்தார். கார் பந்தயம் என்பது மிகவும் சவாலான துறை என்பதால், இதற்காக அஜித் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆவணப்படத்தின் பின்னணியில் மிகப்பெரிய குழு கடுமையாக உழைத்து வருவதாக குறிப்பிட்ட விஜய், இதில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் உண்மையான தருணங்களாக இருக்கும் என்றும், ரீ-டேக் என்ற இல்லாத நிஜ உலகத்தை ரசிகர்கள் இதில் காணப்போகிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அஜித்குமாரே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading