இயக்குநராக இருந்து ஹீரோவாக மாறிய இளன்… நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’!

‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளன், தற்போது தனது அடுத்த படத்தில் ஹீரோவாகவும் களமிறங்குகிறார். ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடித்த அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கவினை வைத்து ‘ஸ்டார்’ படத்தை இயக்கியிருந்தார். இப்போது ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற புதிய திரைப்படத்தை தானே இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் ‘குடும்பஸ்தன்’ படத்தின் நாயகி சான்வி மேக்னா, சமூக வலைதள இன்ப்ளூயன்சராக கதாநாயகியாக நடித்துள்ளார்.

ரொமான்டிக் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்தக் கதை, திருமணத்திற்கு பிறகும் பெண் தனது பெற்றோர் வீட்டை விட்டு செல்ல விரும்பாத சூழலை மையமாகக் கொண்டுள்ளது. அதனால் கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடிபெயர்கிறார். அதன் பின்னர் ஏற்படும் குடும்ப கலாட்டா, கலாசார மோதல்கள் மற்றும் உறவுகளின் சிக்கல்கள் ஆகியவை நகைச்சுவையுடன் சொல்லப்பட்டுள்ளன.

“சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading