அஜித்தை லண்டனில் கார் பந்தயக் களத்தில் சந்தித்த ராதிகா – வைரலாகும் வீடியோ!

சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறும் மிச்செலின் லெ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் நாளை, செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்தப் போட்டியில் அஜித்குமார் தனது அணியுடன் பங்கேற்கிறார். இதற்காக ஏற்கெனவே லண்டன் சென்றுள்ள அஜித், தனது குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் முதல்வர் விஜய், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்பதால், புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டையும் பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, அங்கு அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பந்தயத்திற்கான பயிற்சியில் அஜித் தனது அணியினருடன் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அஜித்தை நேரில் சந்தித்து அவருடன் உரையாடிய வீடியோவை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading