21 ஆண்டுகளுக்குப் பிறகு டோலிவுட் ரீ-என்ட்ரியா?… ‘ஸ்பிரிட்’ படத்தில் கத்ரீனா கைப்?

பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படத்தின் படப்பிடிப்பு சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் திரிப்தி திம்ரி, விவேக் ஓபராய், ஐஸ்வர்யா தேசாய், காஞ்சனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க நடிகை கத்ரீனா கைப் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் மகன் விஹான் கவுசல் பிறந்த பிறகு, குடும்பத்திற்கே அதிக நேரம் ஒதுக்கி வரும் கத்ரீனா, சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது நிபந்தனைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பை திட்டமிட முடியுமா என்பது குறித்து தயாரிப்பு தரப்பு ஆலோசித்து வருகிறது.

இந்த ஒப்பந்தம் உறுதியானால், 2005-ஆம் ஆண்டு வெளியான ‘அல்லரி பிடுகு’ படத்திற்குப் பிறகு, 21 ஆண்டுகள் கழித்து கத்ரீனா கைப் மீண்டும் டோலிவுட்டில் நடிக்கும் திரைப்படமாக ‘ஸ்பிரிட்’ அமையும். பல மொழிகளில் தயாராகும் இந்தப் படம் 2027 மார்ச் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading