யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கும் இந்தப் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது .
நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
1940 முதல் 1970 வரை கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியில் இந்த ஆக்ஷன் திரில்லர் உருவாகியுள்ளது. முதலில் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட படம், பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
—
